தேசியம்
செய்திகள்

சபை அமர்வுகளின் நடைமுறை குறித்து சபாநாயகரின் எச்சரிக்கை

சபை அமர்வுகளில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்து சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
Liberal அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதத்திற்கு முன்னதாக இந்த எச்சரிக்கை வெளியானது.
சபாநாயகர் Greg Fergus இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
இந்த பிரேரணைக்கு ஆதரவளிக்க மாட்டோம் என கடந்த வாரம் NDP எடுத்துள்ள முடிவு சபையில் பெரும் விவாதத்திற்கு வழிவகுத்தது.
அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு ஆதரவாக வாக்களிக்க மறுத்ததற்காக Pierre Poilievre,  NDP தலைவர் Jagmeet Singhகை கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில் வன்முறை, அவமதிப்பு, அச்சுறுத்தல்களுக்கு சபையில் இடம் இல்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் பிரேரணை ஒன்று திங்கட்கிழமை (23) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது

Bloc Québécois நாடாளுமன்ற உறுப்பினர் Claude DeBellefeuille இந்த பிரேரணையை முன்வைத்தார்

சபையில் இருந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதற்கிடையில், சபையின் நன்மதிப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உறுப்பினர்கள் சிலர் சபாநாயகருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த விடயத்தில் சபாநாயகருக்கு பல அதிகாரங்கள் உள்ளன என சுட்டிக்காட்டிய  பசுமை கட்சி தலைவர் Elizabeth May,  அவை பயன்படுத்தப்படுவதில்லை என அதிருப்தி தெரிவித்தார்.

Related posts

49வது Hockey உலக Junior Championship தொடர் கனடாவில்

Lankathas Pathmanathan

மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் உயர்கிறது!

B. C. உலங்கு வானூர்தி விபத்தில் 3 பேர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment