இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு கனடியத் தமிழர் பேரவை – CTC – வாழ்த்து தெரிவித்துள்ளது.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவுக்குக் கனடியத் தமிழர் பேரவை ஒரு அறிக்கையில் வாழ்த்து தெரிவித்துள்ளது.
அவரது வெற்றி இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டத்தைப் பிரதிபலிக்கிறது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இலங்கை வாழ் தமிழ்த் தேசிய இனத்தின் கவலைகள், நீண்டகால அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்வதற்கு வரவிருக்கும் அநுரகுமார திசாநாயக்கவின் நிர்வாகம் முன்னுரிமை அளிக்கும் என நம்புவதாக கனடியத் தமிழர் பேரவை கூறுகிறது.
அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தமிழ்ச் சமூகம் முழுமையாகப் பங்கெடுக்க முடியும் என நம்புவதாக தனது அறிக்கையில் கனடிய தமிழர் பேரவை கூறுகிறது