மிகப்பெரிய பொறுப்பொன்று உலகத் தலைவர்களுக்கு காத்திருக்கிறது என ஐ.நா.வின் எதிர்கால உச்சி மாநாட்டில் பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
ஐ.நா.வின் எதிர்கால உச்சி மாநாடு முதல் தடவையாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் Justin Trudeau ஞாயிற்றுக்கிழமை (22) உரையாற்றினார்.
பன்முகத்தன்மையில் இருந்து விலகிச் செல்வது அல்லது தீவிர உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள வேறுபாடுகளை ஒதுக்கி வைப்பது ஆகியவற்றுக்கு இடையே ஒரு தேர்வு உள்ளது என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.
அமைதியான உலகத்தை உருவாக்கும் எதிர்காலத்திற்கான பொறுப்பு உலகத் தலைவர்களுக்கு உள்ளது எனவும் பிரதமர் கூறினார்.
உலக நன்மைக்காக வேறுபாடுகளை புறக்கணிக்க அவர் உலகத் தலைவர்களிடம் தனது உரையில் அழைப்பு விடுத்தார்.
ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, உலகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, இனப்பெருக்க ஆரோக்கியம் உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகலை மேம்படுத்துவது குறித்த புதிய சர்வதேச ஒருமித்த கருத்தை உருவாக்க இந்த மாநாடு உலகத் தலைவர்களை ஒன்றிணைக்கிறது.