February 22, 2025
தேசியம்
செய்திகள்

விடுப்பு எடுப்பதாக அறிவித்த மாகாண அமைச்சர்!

Ontario மாகாண அமைச்சர் Michael Ford விடுப்பு எடுக்க உள்ளதாக அறிவித்தார்.

தனது உடல் நலத்தில் கவனம் செலுத்தும் வகையில் அமைச்சரவையில் இருந்து விடுப்பு எடுத்துக் கொள்வதாக Michael Ford அறிவித்தார்.

மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்தும் விடுப்பு எடுத்து கொள்வதாகவும் வெள்ளிக்கிழமை (20) வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறினார்.

York South – Weston தொகுதியின் மாகாணசபை உறுப்பினரான அவர், Ontarioவின் குடியுரிமை, பல்கலாச்சார அமைச்சராக உள்ளார்.

இவர் மாகாண முதல்வர் Doug Fordஇன் மருமகனாவார்.

2022 June மாதம் மாகாண சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அந்த மாதத்தின் பிற்பகுதியில் அமைச்சராக பதவியை ஏற்றுக்கொண்டார்.

அவர் முன்னர் Toronto நகரசபை உறுப்பினராகவும் கல்விச் சபை  அறங்காவலராகவும் பணியாற்றினார்.

Related posts

எதிர்பார்க்கப்பட்டதை விட முன்னதாக மீண்டும் திறக்கும் Ontario!

Gaya Raja

கனடிய அரசுக்கும் – பொதுச் சேவை சங்கத்துக்கும் இடையில் தொடரும் பேச்சுவார்த்தை

Lankathas Pathmanathan

கனடா முழுவதும் தொடரும் வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment