பிரதமர் Justin Trudeauவின் சிறுபான்மை Liberal அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முதல் வாய்ப்பை Conservative தலைவர் Pierre Poilievre அடுத்த வாரம் பெற உள்ளார்.
சபை அமர்வில் Conservative எதிர்க்கட்சி நாள் தற்காலிகமாக செவ்வாய்க்கிழமை (24) திட்டமிடப்பட்டுள்ளது.
அன்று Pierre Poilievre வாக்குறுதியளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை Liberal அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரலாம்.
இந்த மூலம் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு புதன்கிழமை (25) நடைபெறும் சந்தர்ப்பம் தோன்றியுள்ளது.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றுவதற்கு, தற்போதைய 336 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் Liberal அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை என வாக்களிக்க வேண்டும்.
தற்போது, Liberal கட்சிக்கு 154 ஆசனங்களும், Conservative கட்சிக்கு 119 ஆசனங்களும் உள்ளன.
திங்கட்கிழமை (16) இடைத் தேர்தலுக்குப் பின்னர், இப்போது Bloc Québécois 33 தொகுதிகளையும், NDP 25 தொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
இலையுதிர்கால அமர்வில் கிடைக்கும் முதல் வாய்ப்பில் சிறுபான்மை அரசாங்கத்தை தோற்கடிக்க ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.
இதில் தனக்கு ஆதரவளிக்க ஏனைய எதிர்க்கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த இலையுதிர்கால அமர்வில் ஏழு எதிர்க்கட்சி நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.