ஆட்சியில் கவனம் செலுத்த உள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.
இரண்டாவது இடைத்தேர்தல் தோல்வியை எதிர்கொண்ட நிலையில் இந்தக் கருத்தை பிரதமர் Justin Trudeau செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தார்.
திங்கட்கிழமை (16) நடைபெற்ற இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் Liberal கட்சி வெற்றி எதையும் பெறவில்லை.
இந்த நிலையில் ஆட்சியில் “கவனம் செலுத்தப் போகிறேன்” என பிரதமர் ஊடகவியலாளர்களிடம் கூறினார்
மீண்டும் ஒரு இடைத் தேர்தலில் தோல்வி அடையும் வகையில் Liberal கட்சிக்கு நிகழ்ந்த தவறு குறித்து “பல பிரதிபலிப்புகள்” உள்ளதாக Justin Trudeau கூறினார்.
அடுத்த தேர்தலில் கனடியர்கள் செய்யக்கூடிய தேர்வு என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்வதை உறுதி செய்வதில் தனது கவனம் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
திங்கள் நடைபெற்ற இடைத்தேர்தலில் தற்போதைய சிறுபான்மை நாடாளுமன்றத்தில் அதிகார சமநிலையை வைத்திருக்கும் கட்சிகள் தலா ஒரு ஆசனங்களை வெற்றி பெற்றது.
நீண்ட காலம் Liberal காலமாக இருந்த Quebec மாகாணத்தின் LaSalle – Émard – Verdun தொகுதியை Bloc Québécois வெற்றி பெற்றது .
Manitoba மாகாணத்தின் Elmwood – Transcona தொகுதியை NDP மீண்டும் வெற்றி பெற்றது.