Quebec மாகாணத்தின் LaSalle – Émard – Verdun தொகுதியை Bloc Québécois கட்சி வெற்றி பெற்றது .
இந்தத் தொகுதியை Liberal கட்சி பிரதிநிதித்துவப்படுத்தி வந்தது.
இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது இடைத் தேர்தலில் Justin Trudeau தோல்வியடைந்தார்.
முன்னாள் Liberal அமைச்சர் David Lametti அரசியலில் இருந்து விலகியதில் இருந்து LaSalle – Émard – Verdun தொகுதி வெற்றிடமாக இருந்தது.
இந்த நிலையில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற இடைத் தேர்தலில் Bloc Québécois கட்சி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் Louis-Philippe Sauve நாடாளுமன்ற உறுப்பினராகிறார்.
அவர் 28 சதவீதம் வரையிலான வாக்குகளை பெற்றார்.
இந்த இடைத் தேர்தலில் மொத்தம் 91 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்தத் தொகுதியில் வாக்களிக்க 72,325 பேர் தகுதி பெற்றிருந்தனர்.
அனைத்து அரசியல் கட்சிகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட இரண்டு முக்கியமான இடைத் தேர்தல்களில் இதுவும் ஒன்றாகும்