தேசியம்
செய்திகள்

நிதி அமைச்சர் Chrystia Freeland பதவி ஆபத்தில்?

நிதி அமைச்சரின் பதவி குறித்த எதிர்க்கட்சியின் விமர்சனத்தை Chrystia Freeland நிராகரித்தார்.

நிதியமைச்சராக Chrystia Freelandடின் எதிர்காலம் குறித்து Conservative கட்சி கேள்வி எழுப்பியது.

நாடாளுமன்றத்தின் இலையுதிர்கால கூட்டத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (16), நிதியமைச்சராக Chrystia Freelandடின் பதவி குறித்து Conservative கட்சி கேள்வி எழுப்பியது.  .

Liberal கட்சியின் பொருளாதார ஆலோசகராக, கடந்த வாரம் கனடா மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் Mark Carney நியமிக்கப்பட்டதை தொடர்ந்து நிதி அமைச்சரின் பதவி குறித்த கேள்வி எழுந்தது.

உண்மையான நிதி அமைச்சராக பணியாற்றுவதற்காக Mark Carney கொண்டு வரப்பட்டார் என Conservative கட்சியின் துணைத் தலைவர் Melissa Lantsman சபை அமர்வில் கூறினார்.

இதன் மூலம் நிதி அமைச்சராக Chrystia Freelandடின்பதவி “தரமிழக்கப்பட்டது” என அவர் தெரிவித்தார்.

ஆனாலும் இந்த விமர்சனத்தை Chrystia Freeland முழுமையாக மறுத்தார்.
Justin Trudeau அரசாங்கத்தில் தனது பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை இதற்கு பதிலளித்த Chrystia Freeland , தெளிவுபடுத்தினார்.

பொருளாதாரம் குறித்து விவாதிப்பதை விட தனிப்பட்ட சேறு பூசும் தாக்குதல்களில் கவனம் செலுத்த Conservative கட்சி ஏன் விரும்புகிறது என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது என Chrystia Freeland கூறினார்.

Related posts

Albertaவில் ஐந்து நாட்களில் 4,903 தொற்றுக்கள்!

Gaya Raja

Ontario: சூரிய கிரகணத்திற்கு பின்னர் 115க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பாதிப்பு?

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment