இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் ஒன்று கனடாவில் நடைபெற்றது.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் போட்டியிடுகிறார்.
இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டமொன்று தமிழ் பொது வேட்பாளர் ஆதரவாளர்களினால் கனடாவில் ஞாயிற்றுக்கிழமை (15) ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
தேசியம் சஞ்சிகையின் ஆசிரியர் இலங்கதாஸ் பத்மநாதன் இந்த கூட்டத்தை வழிநடத்தினார்.
இதில் தமிழர் தகவல் ஆசிரியர் எஸ்.திருச்செல்வம். வணக்கத்துக்குரிய பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன், EPRLF உறுப்பினர் ராஜா யோகராஜா, தமிழரசு கட்சியின் நீண்ட கால உறுப்பினர் வீரசுப்பிரமணியம், நிகழ்வின் ஏற்பாட்டாளர் நிமால் விநாயகமூர்த்தி உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.
களமும் புலமும் இணைந்து, ஒரு தேசமாக அணிதிரளக் கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம் இந்த ஜனாதிபதி தேர்தல் என அங்கு உரையாற்றிய அனைவரும் கருத்து தெரிவித்தனர்.
முதல் முறையாக தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் முன் நிறுத்தப்பட்டிருப்பதை தமிழர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் எனவும் பேச்சாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
நூறு பேர் வரை கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் தமிழ் பொது வேட்பாளருக்கு எந்த வகையில் ஆதரவு வழங்க முடியும் என்ற கருத்துக்களை நவஜீவன் அனந்தராஜ், செந்தமிழன், சட்டத்தரணி Kennedy, வீ.எஸ்.துரைராஜா, Roy விக்னராஜா உள்ளிடுவார்கள் பகிர்ந்து கொண்டனர்.