Air Canada விமான சேவை நிறுவனமும், தொழிற்சங்கமும் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என பிரதமர் Justin Trudeau வலியுறுத்தினார்.
விமானிகள் வேலை நிறுத்தம் காரணமாக Air Canada விமான சேவைகள் எந்நேரமும் இடைநிறுத்தப்படும் நிலை தோன்றியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைக்குள் (15) இரு தரப்புக்கும் இடையில் தீர்வு எட்டப்படாவிட்டால், 72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனாலும் வேலை நிறுத்தத்தை எதிர்பார்த்து வெள்ளிக்கிழமை (13) வரை எந்த விமான சேவைகளும் இரத்து செய்யப்படவில்லை என Air Canada விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் பயணிகள், வணிகங்களுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இரு தரப்பும் உடனடியாக ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என Justin Trudeau கூறியுள்ளார்.
எந்த தரப்புக்கும் தனது ஆதரவை வழங்க போவதில்லை எனவும் பிரதமர் கூறினார்.
அதேவேளை விமானிகள் பணிக்கு திரும்புவதை கட்டாயப்படுத்துவது குறித்த கேள்விக்கு பதில் வழங்குவதை அவர் தவிர்த்துள்ளார்.
முன்னதாக Air Canada விமானிகள் வேலை நிறுத்தம், பேச்சுவார்த்தைகள் மூலம் தவிர்க்கப்படலாம் என மத்திய தொழிலாளர் அமைச்சர் Steve MacKinnon நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.