February 22, 2025
தேசியம்
செய்திகள்

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: Lisa MacLeod

Ontario மாகாணசபை உறுப்பினர் Lisa MacLeod அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
Progressive Conservative கட்சியின் சார்பில் Nepean தொகுதியின் மாகாணசபை உறுப்பினராக Lisa MacLeod பதவி வகிக்கிறார்.
Lisa MacLeod, 2006 முதல் மாகாணசபை உறுப்பினராக பதவி வகிக்கிறார்.

அவர் முதலில் Nepean-Carlton தொகுதியின் மாகாணசபை உறுப்பினராக தெரிவானார்.

தேர்தல் தொகுதி எல்லை மாற்றங்கள் பின்னர் 2018 முதல் அவர்  Nepean தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
ஆனாலும் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என Lisa MacLeod அறிவித்துள்ளார்
Lisa MacLeod குழந்தைகள், சமூக சேவைகள் அமைச்சர், விளையாட்டு, சுற்றுலா அமைச்சர் உள்ளிட்ட அமைச்சு  பதவிகளை வகித்தவராவார்.

Related posts

புதிய வீடுகள் முதன்முறையாக கொள்வனவு செய்பவர்களின் அடமானங்களுக்கு 30 வருட கடன் அனுமதி?

Lankathas Pathmanathan

Albertaவின் பெரும்பகுதிக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை

Lankathas Pathmanathan

November 4ஆம் திகதி Don Valley மேற்கு இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment