Waterloo நகரில் வாகனம் ஒன்றை நிறுத்திய காவல்துறையினர் தொடர்ந்த விசாரணையில் 200க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போக்குவரத்து விதிமீறலுக்காக வாகனம் ஒன்றை Waterloo பிராந்திய காவல்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (06) நிறுத்தினர்.
அந்த வாகனத்தில் துப்பாக்கிகள், வெடிமருந்துகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதில் 39 வயதான சாரதி கைது செய்யப்பட்டார்.
வாகனத்தில் இருந்து 17 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும், Guelph நகரைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் Guelph நகர இல்லத்தில் இருந்து மேலும் 216 துப்பாக்கிகளை கைப்பற்றினர்.