தேசியம்
செய்திகள்

Liberal கட்சியில் இணையும் Mark Carney?

Liberal கட்சியில் சிறப்பு ஆலோசகராக முன்னாள் கனடிய மத்திய வங்கியின் ஆளுநர் Mark Carney இணையவுள்ளார்.

பிரதமரின் சிறப்பு ஆலோசகராக அவர் பொறுப்பேற்க உள்ளார் என கூறப்படுகிறது

இவர் பிரதமர் அலுவலகம், Privy Councilஅலுவலகம் அல்லது நிதி அமைச்சர் Chrystia Freelandடின் அலுவலகம் ஆகியவற்றில் இணைய மாட்டார் எனவும், Liberal கட்சியுடன் இணையும் நகர்வு இது எனவும் கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

British Colombiaவில் நடைபெறும் Liberal  கட்சி நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் Mark Carney கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

அடுத்த சில நாட்களுக்கு அவர் கனடிய பொருளாதாரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mark Carneyயை அரசியலுக்கு அழைத்து வரும் முயற்சியில் பிரதமர் Justin Trudeau ஈடுபட்டுள்ளார் என்ற செய்தி கோடை காலத்தில் வெளியானது.

இந்த நிலையில் அரசியலில் ஈடுபடுவது குறித்தும், Liberal கட்சியில் இணைவது குறித்தும் Mark Carneyயுடன் பேசி வருவதை Justin Trudeau உறுதிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontarioவில் 4,000க்கு மேல் பதிவான தொற்றுகள்!

Lankathas Pathmanathan

Star Blanket Cree Nation பகுதிக்கு பிரதமர் செல்லாதது குறித்து ஏமாற்றம்

Lankathas Pathmanathan

மளிகை தள்ளுபடி கொடுப்பனவுகளை CRA வழங்குகிறது!

Lankathas Pathmanathan

Leave a Comment