Justin Trudeau தலைமையிலான Liberal நாடாளுமன்ற குழுவின் சந்திப்பு திங்கட்கிழமை (09) நடைபெறுகிறது.
British Columbia மாகாணத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
இதில் விரக்தியான பல நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் எதிர்கொள்ளும் நிலை தோன்றியுள்ளது.
Liberal அரசாங்கத்திற்கான ஆதரவை NDP விலத்திய நிலையில் நிச்சயமற்ற எதிர்காலத்தை Justin Trudeau எதிர்கொள்கிறார்.
October 2025 இறுதிக்குள் நடத்தப்பட வேண்டிய தேர்தலில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான Conservative கட்சி,
பெரும் வெற்றி பெறும் என அண்மைய கருத்துக் கணிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.
NDP எடுத்துள்ள முடிவு சில மாதங்களுக்கு முன்னதாக தேர்தலை நடத்தும் சாத்தியக்கூற்றை தோற்றுவித்துள்ளது.
இந்த நிலையில் நடைபெறும் Liberal நாடாளுமன்ற குழு சந்திப்பு பிரதானமாக கருதப்படுகிறது.