2024 Paris Paralympics போட்டியில் பத்தாவது நாள் கனடா மொத்தம் ஆறு பதக்கங்களை வெற்றி பெற்றது.
இதில் இரண்டு தங்கப் பதக்கங்களும் அடங்குகின்றன.
Paris Paralympics போட்டியில் பத்தாவது நாளான சனிக்கிழமை (07) கனடா இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியது.
இம்முறை Paralympics போட்டியில் ஒரு நாளில் கனடா வெற்றி பெற்ற அதிக எண்ணிக்கையிலான பதக்கங்கள் இதுவாகும்.
ஆண்கள் தடகளப் போட்டியில் Austin Smeenk தங்கம் வென்றார்.
பெண்கள் நீச்சல் போட்டியில் Danielle Dorris தங்கம் வென்றார்.
பெண்கள் Canoe போட்டியில் Brianna Hennessy வெள்ளி வென்றார்.
ஆண்கள் தடகளப் போட்டியில் Nate Riech வெள்ளி வென்றார்.
கனடிய பெண்கள் கைப்பந்து அணி வெண்கலம் வென்றது.
நீச்சல் போட்டியில் Shelby Newkirk வெண்கலம் வென்றார்.
Paris Paralympics போட்டியில் பத்தாவது நாள் முடிவில் கனடா பத்து தங்கம், ஒன்பது வெள்ளி, பத்து வெண்கலம் என மொத்தம் இருபத்து ஒன்பது பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.