தேசியம்
செய்திகள்

அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதலுக்கு சதி செய்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பிரஜை கனடாவில் கைது

New Yorkகில் தீவிரவாத தாக்குதலுக்கு சதி செய்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் Shazeb Jadoon என்ற பெயரில் அறியப்படும் 20 வயதான Muhammad Shahzeb Khan என அடையாளம் காணப்பட்டார்.

கனடாவில் வசிக்கும் இவர், Brooklyn பெருநகரம் உள்ள யூத மையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தும் திட்டத்துடன் அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றதாக குற்றம் சாட்டப்படுகிறது.

கடந்த புதன்கிழமை இவர் கனடிய காவல்துறையினரால் Quebec மாகாண எல்லைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

இவர் இந்த ஆண்டு October 7 ஆம் திகதி New York நகரில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

ISIS பெயரில், முடிந்தவரை யூத மக்களை படுகொலை செய்வதை இவர் குறிக்கோளாகக் கொண்டிருந்தார் என அமெரிக்க நீதித்துறை அதிகாரி Merrick B. Garland ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த கைதில் கனடிய காவல்துறையின் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளுக்காக நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் எனவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சரிடம் பேசியுள்ளதாக அவர் கூறினார்.

FBI, RCMP அதிகாரிகள் இடையேயான வலுவான கூட்டு நடவடிக்கையின் விளைவாகவே இந்த கைது சாத்தியமானதாக பொது பாதுகாப்பு அமைச்சர் Dominic LeBlanc கூறினார்.

FBI விசாரணையின் இலக்காகியுள்ள Muhammad Shahzeb Khan, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கு பொருள் உதவி, ஆதாரங்களை வழங்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.

இவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13) Montreal நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்படவுள்ளார்.

Related posts

இரண்டு வருடத்தில் 40 ஆயிரம் ஆப்கானியர்கள் கனடாவுக்கு அழைத்து வரப்படுவார்கள்: குடிவரவு அமைச்சர்

Lankathas Pathmanathan

70வது NATO அமர்வு கனடாவில்

Lankathas Pathmanathan

கனடாவின் மக்கள் தொகை 2068இல் 57 மில்லியனாக அதிகரிக்கலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment