தேசியம்
செய்திகள்

15 வயது பாடசாலை மாணவி தீ வைத்து எரிந்த சம்பவம்!

Saskatoon உயர்நிலைப் பாடசாலையில் 15 வயது மாணவி தீ வைத்து எரிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Evan Hardy கல்லூரியில் வியாழக்கிழமை (05) இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதில் குறிப்பிட்ட மாணவி பலத்த காயங்களுக்கு உள்ளானார்.

இவரை காப்பாற்ற முயன்ற ஆசிரியருக்கும் காயம் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்த மாணவியும், ஆசிரியையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மாணவியின் காயங்கள் ஆபத்தானவை என கூறப்படுகிறது.

சம்பவம் நிகழ்ந்த பாடசாலை வியாழன், வெள்ளிக்கிழமை (06) மூடப்பட்டுள்ளது.

இதே பாடசாலையை சேர்ந்த 14 வயது மாணவி இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவருக்கு எதிராக குற்றச் சாட்டுகள் எதுவும் பதிவாகவில்லை.

Related posts

புதிய குடிவரவாளர்களுக்கு எதிராக Ontario முதல்வர் கருத்து!

Lankathas Pathmanathan

போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட அமைப்பாளர்களில் ஒருவருக்கு பிணை மறுப்பு

Lankathas Pathmanathan

Ontarioவிற்கு உதவிகளை அனுப்ப முடிவு செய்துள்ள மத்திய அரசு!

Gaya Raja

Leave a Comment