February 23, 2025
தேசியம்
செய்திகள்

முன்கூட்டிய தேர்தலுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது: Jagmeet Singh

முன்கூட்டிய தேர்தலுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார்.

Liberal கட்சியுடனான நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து NDP வெளியேறுவதாக கட்சியின் தலைவர் Jagmeet Singh புதன்கிழமை (04) அறிவித்தார்.

Liberal கட்சியை “பலவீனமானவர்கள்”,  சுயநலவாதிகள்” என விமர்சித்த Jagmeet Singh, அவர்கள் கனடியர்களிடமிருந்து மற்றொரு வாய்ப்பை பெற தகுதியற்றவர்கள் எனவும் தனது அறிவித்தலில் கூறினார்.

இந்த அறிவித்தல் வெளியான பின்னர் வியாழக்கிழமை (05) முதல் தடவையாக Jagmeet Singh செய்தியாளர்களிடம் பேசினார்.

Liberal அரசாங்கத்தால் கனடியர்களுக்கு தேவையான “மாற்றத்தை வழங்க முடியாது” என்ற தனது வலியுறுத்தலை இந்த செய்தியாளர் சந்திப்பில் Jagmeet Singh முன்வைத்தார்.

Justin Trudeau உடன் March 2022இல் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தில் இருந்து NDP வெளியேறுவதன் மூலம், முன்கூட்டிய தேர்தலுக்கு “அதிக வாய்ப்புள்ளது” என்பதை Jagmeet Singh ஏற்றுக் கொண்டார்

அடுத்த தேர்தல் NDP – Conservative கட்சிகளுக்கு இடையிலான ஒரு தேர்வாக உருவாகி வருவதாகவும் அவர் கூறினார்.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

COVID தொற்றின் நீண்ட கால பாதிப்பு குறித்து கண்டறியும் முயற்சியில் கனடிய பொது சுகாதார நிறுவனம்

Lankathas Pathmanathan

Torontoவில் தமிழர்களின் திரையரங்கில் தீ?

Lankathas Pathmanathan

Leave a Comment