தேசியம்
செய்திகள்

மத்திய தேர்தல் வரலாற்றில் அதிக வேட்பாளர்களைக் கொண்ட தேர்தல்

மத்திய தேர்தல் வரலாற்றில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக Montreal இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

LaSalle-Émard-Verdun தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் குறைந்தது 91 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

இவர்களில் எழுபத்தி ஒன்பது பேர் Longest Ballot குழுவை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

இந்த இடைத்தேர்தல் September மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் இறுதிப் பட்டியல் புதன்கிழமை (28) வெளியாகும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

கடந்த June 24 நடைபெற்ற, Toronto-St. Paul இடைத்தேர்தல் முடிவுகள் பல மணி நேரம் தாமதமானது.

இந்தத் தேர்தலில் 84 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இவர்களில் 77 பேர் Longest Ballot குழுவை சேர்ந்தவர்கள்.

முன்னாள் Liberal நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான David Lametti பதவி விலகியதை தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

1988 முதல்2011 வரை, LaSalle-Émard தொகுதியை முன்னாள் பிரதமர் Paul Martin பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மருத்துவமனைகளின் கொடூரமான நிலையை பார்வையிடுங்கள்: Alberta முதல்வருக்கும் சுகாதார அமைச்சருக்கும் அழைப்பு!

Gaya Raja

Ontario மாகாண NDP தலைவராக பதவியேற்கும் Marit Stiles

Lankathas Pathmanathan

OPP துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment