நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ள புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தம் பயணிகள் புகையிரத சேவையில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
கனடாவின் இரண்டு மிகப்பெரிய புகையிரத சேவையில் பணிநிறுத்தம் வியாழக்கிழமை (22) நள்ளிரவு ஆரம்பமானது.
Canadian National Railway Co. (CN Rail), Canadian Pacific Kansas City Ltd. (CPKC) பணியாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கின்றனர்.
புதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்படாத நிலையில் இந்த பணிநிறுத்தம் ஆரம்பமானது.
கனடாவின் இரண்டு மிகப்பெரிய புகையிரத சேவையில் ஒரே நேரத்தில் பணிநிறுத்தம் முன்னெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
CPKCக்கு சொந்தமான வழித்தடங்களில் இயங்கும் Toronto, Montreal, Vancouver நகரங்களில் உள்ள பயணிகள் சேவையில் இந்த வேலை நிறுத்தம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில் இரு தரப்பும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என Ontario முதல்வர் Doug Ford கோரியுள்ளார்.