தேசியம்
செய்திகள்

Ottawa Pride அணிவகுப்பில் இருந்து விலகும் Liberal கட்சி

Ottawa Pride அணிவகுப்பில் இருந்து Liberal கட்சி விலகியுள்ளது.
Capital Pride வெளியிட்ட பாலஸ்தீன ஆதரவு அறிக்கை காரணமாக இந்த  அணிவகுப்பில் இருந்து விலக  Liberal கட்சி முடிவு செய்துள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் வெளியான ஒரு அறிக்கையில் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை Ottawa Pride அமைப்பாளர்கள் உறுதியளித்தனர்.

இந்த நிலையில் Pride அணிவகுப்பில் இருந்து விலக Liberal கட்சி முடிவு செய்துள்ளது.

Ottawaவில் உள்ள அமெரிக்க தூதரகம், Ottawa நகர முதல்வர் Mark Sutcliffe உள்ளிட்ட பலரும் இம்முறை Ottawa Pride அணிவகுப்பில் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்துள்ளன.

பிரதமர் Justin Trudeau உட்பட, முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் முன்னர் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வருடாந்த Capital Pride நிகழ்வுகள் இந்த வார இறுதியில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

Pride அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெறுகிறது.

Related posts

உக்ரைனில் கண்ணி வெடிகளை அகற்ற கனடிய அரசாங்கம் $15 மில்லியன் நிதி உதவி

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 19ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

இலங்கையின் நெருக்கடி நிலை குறித்து கனடிய துணை பிரதமர் ஆலோசனை

Lankathas Pathmanathan

Leave a Comment