கனடாவின் முன்னாள் ஐ.நா அதிகாரி சுவிட்சர்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது வட கொரியாவுக்காக பணிபுரியும் கனடிய முன்னாள் ஐ.நா அதிகாரி ஒருவர் உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் சுவிட்சர்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஐம்பது வயது மதிக்கத்தக்க கனடியர், சுற்றுச்சூழல் ஆலோசகராக தனது பணிக்காக சீனாவுக்கு பயணம் செய்து வந்தது தெரியவருகிறது.
2021 முதல் ஆரம்பமான விசாரணைகளை தொடர்ந்து, உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் சுவிஸ் அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
சுவிஸ் அதிகாரிகள் விசாரணையில், அவர் சீனாவின் சார்பாக பணியாற்றுவது கண்டறியப்பட்டது.
இவர் மீது இதுவரை குற்றச் சாட்டுகள் எதுவும் பதிவாகவில்லை.