தேசியம்
செய்திகள்

கனடிய Olympic வீரரின் பயிற்சியாளரின் அங்கீகாரம் இரத்து!

ஆறு முறை Olympic பதக்கம் வென்ற கனடிய வீரரின் பயிற்சியாளரின் அங்கீகாரத்தை இரத்து செய்துள்ளதாக கனடிய Olympic குழு – Canadian Olympic Committee (COC) தெரிவித்துள்ளது.

பயிற்சியாளர் Rana Reiderரின் அங்கீகாரத்தை கனடிய Olympic குழு இரத்து செய்துள்ளது.

இவர் Olympic பதக்கம் வென்ற கனடிய வீரர் Andre De Grasseசின் பயிற்சியாளராவார்.

புதிதாக கிடைக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக COC தெரிவித்தது.

ஆனால் இந்த புதிய தகவலின் தன்மை குறித்து  COC தகவல் வெளியிடவில்லை.

ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் Andre De Grasse அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Related posts

Stanley Cup: வெளியேற்றப்படுமா Toronto Maple Leafs?

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

2023 Davis கோப்பை தரவரிசையில் Group A பிரிவில் முதலாவது நாடாக கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment