காணாமல் போன மூன்று வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.
Ontario மாகாணத்தில் Mississauga நகர பூங்கா ஒன்றில் இந்த மூன்று வயது சிறுவன் காணாமல் போனதாக வியாழக்கிழமை (25) காவல்துறையினரிடம் முறையிடப்பட்டது.
இந்த சிறுவனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் வெள்ளிக்கிழமை (26)மீட்கப்பட்டது.
Erindale பூங்காவிற்கு அருகில் உள்ள ஒரு சிற்றோடையில் Zaid Abdullah வெள்ளி மாலை சடலமாக மீட்கப்பட்டார்.
இவரது மரணத்தில் சந்தேகத்திற்கு இடமில்லை என Peel பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிறுவனின் மரணத்திற்கான காரணத்தை பிரேத பரிசோதனையாளர் தீர்மானிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.