தேசியம்
செய்திகள்

Alberta காட்டுத்தீ: மத்திய அரசின் அவசர உதவிக்கு ஒப்புதல்

மத்திய அரசின் உதவிக்கான Alberta மாகாணத்தின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

கடுமையான காட்டுத்தீ Alberta மாகாணத்தில் வேகமாக பரவி வருகிறது.

Jasper தேசிய பூங்கா உள்ளிட்ட பகுதிகள் இதனால் பெரும் ஆபத்தில் உள்ளன.

இந்த காட்டுத் தீயை எதிர்கொள்வதற்கு கனடிய இராணுவத்தின் உதவி உடனடியாக அனுப்பி வைக்கப்படுவதாக பிரதமர் கூறினார்

Alberta மாகாணம் கோரிய ஏனைய அவசர உதவிகள் வழங்கப்படும் எனவும் அவர் உறுதிப்படுத்தினார்.

புதன்கிழமை (24) பிற்பகல் நிலவரப்படி, மாகாணத்தின் வன பாதுகாப்பு பகுதியில் 176 காட்டுத் தீ எரிகிறது.

இதில் Jasper தேசிய பூங்காவை அச்சுறுத்தும் இரண்டு காட்டுத்தீ உள்ளடக்கப்படவில்லை.

Related posts

ரஷ்யாவுக்கு எதிரான போர் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளது: கனடாவுக்கான உக்ரைன் தூதுவர்

Lankathas Pathmanathan

NATO செலவின இலக்கிலிருந்து வெகு தொலைவில் உள்ள கனடா

Ontarioவின் முகமூடி கட்டுப்பாடுகள் வார இறுதியில் காலாவதியாகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment