Jasper தேசிய பூங்கா காட்டுத்தீ வெளியேற்ற உத்தரவின் கீழ் உள்ளது.
மேற்கு Albertaவில் உள்ள தேசிய பூங்காவை அதிக வெப்பநிலை, காற்று அச்சுறுத்தும் வகையில் காட்டுத்தீயின் தீப்பிழம்புகளை தூண்டியது.
Alberta மாகாண அவசர வெளியேற்ற உத்தரவு எச்சரிக்கையில் Jasper தேசிய பூங்காவும் உள்ளடங்கியுள்ளது
Jasper தேசிய பூங்காவின் பார்வையாளர்கள், முகாம் வாசிகள், குடியிருப்பாளர்கள் திங்கட்கிழமை (22) இரவு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
Jasper தேசிய பூங்காவில் இருந்தவர்கள் British Columbia நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
காட்டுத்தீ காரணமாக Jasper நகராட்சியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நெடுஞ்சாலைகள் மூடப்படுகின்றது.