February 23, 2025
தேசியம்
செய்திகள்

Joe Biden கனடியர்களின் ஒரு சிறந்த நண்பன்: பிரதமர் Justin Trudeau

அமெரிக்காவின் ஜனாதிபதியாக, Joe Biden கனடியர்களுக்கு ஒரு சிறந்த நண்பனாக விளங்கியவர் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என Joe Biden ஞாயிற்றுக்கிழமை (21) அறிவித்தார்.

இந்த அறிவித்தலுக்கு பதிலளிக்கும் வகையில் Justin Trudeauவின் கருத்து வெளியானது

“நான் ஜனாதிபதி Joe Bidenனை பல ஆண்டுகளாக அறிவேன்” என கூறிய Justin Trudeau, அவர் ஒரு சிறந்த மனிதர் எனவும் “அவர் செய்யும் அனைத்தும் அவரது தேசத்தின் மீதான அன்பால் வழி நடத்தப்படுகிறது” எனவும் குறிப்பிட்டார்

கனடாவின் ஒரே அண்டை நாடாகவும், முக்கிய வர்த்தகப் பங்காளியாகவும் அமெரிக்கா உள்ளது.

இந்த நிலையில் Joe Biden வெளியிட்ட அறிவித்தல் கனடாவின் மீது பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் சந்தர்ப்பங்கள் உள்ளன.

Joe Biden “ஒரு அனுபவம் வாய்ந்த, சிந்தனைமிக்க, அர்ப்பணிப்புள்ள தலைவர்” என அமெரிக்காவுக்கான கனடாவின் தூதர்  Kirsten Hillman கூறினார்.

Related posts

கனடாவின் மக்கள் தொகை 40 மில்லியனை எட்டுகிறது!

Lankathas Pathmanathan

சீனாவின் வெளிநாட்டு தலையீட்டின் இலக்கான NDP நாடாளுமன்ற உறுப்பினர்?

Lankathas Pathmanathan

கனடா இந்தியாவில் இருந்து குற்றவாளிகளை வரவேற்கிறது?

Lankathas Pathmanathan

Leave a Comment