வேலை நிறுத்தம் முடிவடைந்ததை LCBO உறுதிப்படுத்தியது.
இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கடைகள் செவ்வாய்க்கிழமை (23) மீண்டும் திறக்கப்படும் எனவும் LCBO உறுதிப்படுத்தியது.
LCBO சனிக்கிழமை ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
Ontario மதுபானக் கட்டுப்பாட்டு வாரியமும் (LCBO) அதன் 10,000 தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் Ontario பொது சேவை ஊழியர் சங்கமும் (OPSEU) சனிக்கிழமை (20) ஒரு தற்காலிக உடன்பாட்டை எட்டினர்.
இது செவ்வாய்க்கிழமை மதுபான கடைகள் திறக்க வழி செய்கிறது.
LCBO, OPSEU இடையிலான ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், தற்காலிக ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்பட்டது.
பணிக்குத் திரும்புவதற்கான நெறிமுறையில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்காலிக ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு சனிக்கிழமை ஆரம்பிக்கிறது.
LCBO தொழிலாளர்கள் திங்கட்கிழமை (22) வேலைக்கு திரும்புவார்கள்.
ஆனால் செவ்வாய்க்கிழமை வரை கடைகள் பொதுமக்களுக்குத் திறக்கப்படாது என அறிவிக்கப்படுகிறது.