February 22, 2025
தேசியம்
செய்திகள்

கோடை காலத்தின் இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம்?

கோடை காலத்தின் இறுதிக்குள் பெரும் அமைச்சரவை மாற்றம் ஒன்றை பிரதமர் Justin Trudeau அறிவிப்பார் என ஊகங்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநர் Mark Carneyயை அரசியலுக்கு அழைத்து வரும் முயற்சியில் பிரதமர் Justin Trudeau ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அமைச்சரவை மாற்றம் குறித்த ஊகங்கள் வெளியாகியுள்ளன.

அரசியலில் ஈடுபடுவது குறித்து Mark Carneyயுடன் பேசி வருவதை Justin Trudeau அண்மையில் உறுதிப்படுத்தினார்.

நிதி அமைச்சில் Chrystia Freelandடிற்கு பதிலாக Mark Carneyயை நியமிப்பது குறித்த உரையாடல்கள் நிகழ்வதாக செய்தி வெளியானது.

துணை பிரதமருக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தும் ஒரு அரசியல் புத்துணர்ச்சியை ஏற்படுத்த பிரதமர் எதிர்கொள்ளும் அழுத்தத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

Related posts

தமிழ் இனப்படுகொலை நினைவு நிகழ்வில் கனடிய வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

கனடாவை வந்தடைந்த 1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்

Lankathas Pathmanathan

பொருளாதார அறிக்கை எதிர்வரும் 14ஆம் திகதி வெளியாகும்

Lankathas Pathmanathan

Leave a Comment