LCBO வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தற்காலிக ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதிய கோரிக்கைகளை தொழிற்சங்கம் அறிமுகப்படுத்துவதாக மாகாணம் குற்றம் சாட்டிய நிலையில் இந்த தற்காலிக ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பணிக்குத் திரும்புவதற்கான நெறிமுறையின் விதிமுறைகளில் இரு தரப்பும் உடன்பட முடியாது நிலை தோன்றியுள்ளது
இதனால் ஒரு தற்காலிக உடன்படிக்கை அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் LCBO வேலை நிறுத்தம் மீண்டும் தொடர்கிறது.
LCBO வெள்ளிக்கிழமை (19) மதியம் தொழிலாளர்கள் உடனான ஒப்பந்தத்தை அறிவித்தது.
இதன் மூலம் செவ்வாய்க்கிழமை (23) முதல் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என LCBO அறிவித்திருந்தது.
ஆனாலும் வேலைக்கு திரும்புவதற்கான நெறிமுறையில் கையெழுத்திட Ontario மாகாணம் மறுக்கிறது என தொழிற்சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் வெள்ளி பிற்பகல் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
வேலைக்குத் திரும்புவதற்கான நெறிமுறை ஆவணம் இல்லாமல் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எந்த ஒப்பந்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்
ஆனாலும் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் தொழிற்சங்கம் புதிய கோரிக்கைகளை அறிமுகப்படுத்தியதாக மாகாண அரசாங்கம் குற்றம் சாட்டியது.