LCBO வேலை நிறுத்தம் தற்காலிகமாக தொடரும் என தொழிற்சங்கம் தெரிவித்தது.
LCBO வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தற்காலிக உடன்பாட்டை வெள்ளிக்கிழமை (19) எட்டியது.
இதன் மூலம் கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கடைகள் செவ்வாய்க்கிழமை (23) மீண்டும் திறக்கப்படும் சாத்தியக்கூறுகள் தோன்றின.
ஆனாலும் Ontario அரசாங்கம் மீண்டும் வேலைக்கு திரும்புவதற்கான நெறிமுறையில் கையெழுத்திடும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என தொழிற்சங்கம் தெரிவித்தது.
தமது உறுப்பினர்கள் வேலைக்குத் திரும்புவதற்கான நெறிமுறையில் கையெழுத்திட Ontario அரசாங்கம் மறுக்கிறது என LCBO தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் கூறுகிறது.
இந்த நிலையில் மாகாணம் முழுவதும் சில்லறை விற்பனை நிலையங்களை மூடிய வேலை நிறுத்தம் தொடரவுள்ளது.