தேசியம்
செய்திகள்

உலகளாவிய தொழில்நுட்ப செயலிழப்பால் கனடாவிலும் பாதிப்பு!

பல தொழில் செயல்பாடுகளை சீர்குலைக்கும் உலகளாவிய தொழில்நுட்ப செயலிழப்பை கனடியர்களும் எதிர்கொள்கின்றனர்.

உலகளாவிய தொழில்நுட்ப செயலிழப்பால் விமான நிறுவனங்கள், வங்கிகள், சுகாதாரப் பாதுகாப்பு செயல்பாடுகள், எல்லை கடவை சேவைகள் கனடாவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை (19) பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த தொழில்நுட்ப செயலிழப்பால் கனடாவில் விமானங்கள் பல தரையிறக்கப்பட்டுள்ளது, மருத்துவமனை சேவைகள்  சீர்குலைந்துள்ளது, எல்லைக் கடவை சேவைகளை பாதித்துள்ளது.

கனடாவின் மிகப்பெரிய மருத்துவமனை வலைப் பின்னல்களில் ஒன்றான University Health Network, செயலிழப்புகளை அறிவித்துள்ளது.

விமான நிறுவனங்களுடன் விமான சேவைகளை உறுதிப்படுத்துமாறு கனடா முழுவதும் உள்ள விமான நிலையங்கள் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் சில பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

Air Canada, Westjet, Sunwing, Flair விமான சேவைகளில் பாதிப்புகள் எதுவும் இல்லை என அவர் உறுதிப்படுத்தினார்.

ஆனால் பிரதான அமெரிக்க விமான சேவைகள் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்

கனடா முழுவதும், சில அமெரிக்க நகரங்களுக்கும் விமான சேவைகளை வழங்கும் Porter விமான நிறுவனம், அனைத்து விமான சேவைகளையும் வெள்ளி மதியம் வரை இரத்து செய்துள்ளது.

Montreal-Trudeau சர்வதேச விமான நிலையத்தில் எதிர்கொள்ளப்படும் சேவை பாதிப்புகள் சீர் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

அமெரிக்காவுடனான Ambassador பாலம், Detroit-Windsor சுரங்கப்பாதையில் நீண்ட தாமதங்கள் எதிர் கொள்ளப்படுவதாக Windsor காவல்துறை தெரிவித்துள்ளது.

Newfoundland and Labrador  மாகாண அரசாங்கம் அதன் இணையத் தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு சாத்தியமான சேவை இடையூறுகள் குறித்து எச்சரித்துள்ளது.

Related posts

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஐந்து கனேடியர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்

Lankathas Pathmanathan

கொலை குற்றச்சாட்டு சந்தேக நபரான தமிழர் கைது

Lankathas Pathmanathan

TTC கட்டண உயர்வு அறிவிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment