February 22, 2025
தேசியம்
செய்திகள்

பாதுகாப்புப் படைத் தலைவராக பதவி ஏற்ற முதல் பெண்

கனடாவின் பாதுகாப்புப் படைத் தலைவராக முதல் தடவையாக பெண் ஒருவர் பதவி ஏற்றார்.

கனடிய ஆயுதப்படைக்கு தலைமை தாங்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை General Jennie Carignan பெற்றார்.

கனடாவின் ஆயுதப்படைக்கு தலைமை தாங்கும் முதல் பெண்மணியாக அவர் வியாழக்கிழமை (18) பதவி ஏற்றார்.

கனடிய யுத்த அருங்காட்சியகத்தில் அவரது பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

கனடாவின் ஆளுநர் நாயகம் Mary Simon இந்த பதவி ஏற்பு நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.

பிரதமர் Justin Trudeau, பாதுகாப்பு அமைச்சர் Bill Blair உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இராணுவப் பொறியாளராகப் பயிற்றுவிக்கப்பட்ட Jennie Carignan, கனடிய இராணுவத்தில் 35 வருடங்கள் பணி அனுபவம் கொண்டவராவார்.

ஆப்கானிஸ்தான், Bosnia-Herzegovina, ஈராக், சிரியா ஆகிய இடங்களில் அவர் கனடிய இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக பணியாற்றியவர்.

2021 முதல் தலைமை இராணுவ தளபதியாக பணியாற்றிய General Wayne Eyre பதவியை  General Jennie Carignan பொறுப்பேற்கிறார்.

General Wayne Eyre, 40 ஆண்டுகளின் பின்னர் ஓய்வு பெறுகிறார்.

Related posts

Halifax உயர்நிலைப் பாடசாலையில் மூவர் மீது கத்தி குத்து

Lankathas Pathmanathan

கனடா அடுத்த வாரம் 45 இலட்சம் தடுப்பூசிகளை பெறும்: அமைச்சர் அனிதா ஆனந்த்

Gaya Raja

கனடாவிற்கான ரஷ்ய தூதுவர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்: அமைச்சர் Joly

Lankathas Pathmanathan

Leave a Comment