February 22, 2025
தேசியம்
செய்திகள்

உயர்மட்ட Liberal  அமைச்சர் பதவி விலகல்

Justin Trudeau அமைச்சரவையில் இருந்து உயர்மட்ட Liberal  அமைச்சர் விலகுவதாக அறிவித்துள்ளார்.

அரசியலில் இருந்து விலகவுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் Seamus O’Regan வியாழக்கிழமை (18) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என Seamus O’Regan அறிவித்தார்.

ஆனால் அடுத்த பொதுத் தேர்தல் வரை தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக தொடரவுள்ளதாக Seamus O’Regan அறிவித்தார்.

கடந்த கனடா தினத்தன்று அரசியலில் இருந்து விலகும் தனது முடிவை Seamus O’Regan பிரதமரிடம் தெரிவித்தார்.

Justin Trudeau தலைமையிலான அமைச்சரவை வெள்ளிக்கிழமை (19) அவசரமாக சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

மெய்நிகர் வழியாக நடைபெற உள்ள இந்த அமைச்சரவை சந்திப்பில் “நியமனங்கள்” குறித்து கலந்துரையாடபட உள்ளதாக தெரியவருகிறது.

இந்த சந்திப்பில் Justin Trudeau தொழிலாளர் அமைச்சர் பதவிக்கு புதிய ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதிய தொழிலாளர் அமைச்சர் வெள்ளிக்கிழமை பதவியேற்பார் என பிரதமர் அலுவலகம் அறிவித்தது.

St John’s South-Mount Pearl தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 2015ஆம் ஆண்டு Seamus O’Regan தெரிவானார்.

அவர் 2019, 2021 தேர்தல்களில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2017 ஆம் ஆண்டில் Seamus O’Regan  படைவீரர் விவகார அமைச்சராக – veterans affairs – நியமிக்கப்பட்டார்.

அவர் சுதேச சேவைகள் (Indigenous services), இயற்கை வளங்கள் (natural resources), தொழிலாளர் (labour), முதியோர் (seniors) உட்பட பல அமைச்சு பதவிகளை வகித்தார்.

இவர் பிரதமர் Justin Trudeau வின் நீண்ட கால நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Freedom Convoy ஆர்ப்பாட்டத்திற்கு $25 மில்லியன் திரட்டப்பட்டது

Lankathas Pathmanathan

Albertaவில் காணாமல் போன சிறுமி மரணம்

Lankathas Pathmanathan

கனடாவில் 27 ஆயிரத்தை தாண்டியது COVID மரணங்கள்!

Gaya Raja

Leave a Comment