தமிழர்களைப் பிரதிநிதித்துவ படுத்தவோ அல்லது தமிழர் தெருவிழாவை நடத்தவோ கனேடியத் தமிழர் பேரவைக்கு இனியும் தார்மீக அதிகாரம் இல்லை என கனேடியத் தமிழர் கூட்டு சுட்டிக் காட்டியுள்ளது.
தமிழர்கள் கனேடியத் தமிழர் பேரவை மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர் என கூட்டு அண்மையில் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.
பொறுப்புக்கூறல், ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை, சட்ட நியமங்களின் அடிப்படையிலான நிர்வாகம் ஆகிய அடிப்படை கோட்பாடுகளுடன் கனேடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவபடுத்துவதில் பேரவை தொடர்ந்து தோல்வி அடைந்திருப்பதை கூட்டு இந்த அறிக்கையில் வெளிப்படையாகக் கண்டிக்கிறது.
சமீபத்தில் புதிய இயக்குனர் சபை நியமிக்கப்பட்ட முறை, வெளிப்படைத்தன்மை இல்லாத பேரவையின் எதேச்சதிகார இயல்புக்கு உதாரணமாகும் என கூட்டு தனது அறிக்கையில் சுட்டிக் காட்டுகிறது.
அரங்கேற்றப்படும் தேர்தல்கள், உறுப்பினர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படும் நிலை என பேரவையின் சட்ட அதிகாரம் குறித்த கேள்விகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்படுகிறது.
- Toronto நகரம் தமிழர் தெருவிழாவை சமூகத்தின் நலன்களை உண்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அமைப்புகளின் கூட்டணிக்கு மாற்ற வேண்டும்
- தமிழ் இருக்கை திட்டத்தை முன்னெடுப்பதில் Toronto பல்கலைக்கழகம் தமிழ் அமைப்புகளின் கூட்டணியுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
போன்ற முக்கிய கோரிக்கைகள் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
கனேடியத் தமிழர் கூட்டு வெளியிட்ட அறிக்கையின் முழு வடிவம்: