முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மீதான படுகொலை முயற்சி குறித்து கனடிய மாகாண முதல்வர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மாகாண முதல்வர்கள் மூன்று நாள் கூட்டம் திங்கட்கிழமை (15) ஆரம்பமாகி, Nova Scotia மாகாணத்தின் தலைநகர் Halifaxசில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் தங்கள் பாதுகாப்பை முதல்வர்கள் மறுபரிசீலனை செய்கின்றனர்.
மக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான உறவில் மிகவும் நிலையற்ற தருணத்தில் உள்ளோம் என மாகாண முதல்வர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளும் P.E.I. முதல்வர் Dennis King கூறினார்.
தனது பாதுகாப்பை பாதுகாப்பு புக் குழுவுடன் மறுபரிசீலனை செய்வதாக Alberta முதல்வர் Danielle Smith தெரிவித்தார்.
தன்னைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவில் நம்பிக்கை கொண்டிருப்பதாக Ontario முதல்வர் Doug Ford கூறினார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சியின் பின்னர் கனடாவில் உள்ள அச்சுறுத்தல் நிலை குறித்து RCMP, CSIS மூலம் தனக்கு விளக்கமளிக்க பட்டுள்ளதாக கனடாவின் மத்திய பொது பாதுகாப்பு அமைச்சர் Dominic Leblanc தெரிவித்தார்.