அமெரிக்காவில் நிகழ்ந்த அரசியல் வன்முறை கனடாவில் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் கனடாவின் பாதுகாப்பு நிலை குறித்து RCMP, CSIS பொது பாதுகாப்பு அமைச்சருக்கு விளக்கமளித்துள்ளது.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கலந்து கொண்ட பிரச்சார நிகழ்வில் சனிக்கிழமை (13) துப்பாக்கிப் பிரயோகம் நிகழ்ந்தது.
இந்த நிலையில் கனடாவின் பாதுகாப்பு நிலை குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் Dominic LeBlancக்கு RCMP, CSIS ஆகியன விளக்கமளித்துள்ளன.
கனடிய அரசியல்வாதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ள அமைச்சர் மறுத்துள்ளார்.
கனடிய அரசியல்வாதிகள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் போது பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேவையான நிலையில் RCMP உள்ளதாக Dominic LeBlanc கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி Donald Trump மீதான கொலை முயற்சியாக இந்த துப்பாக்கி பிரயோகம் விசாரிக்கப்படுகிறது.