COPA அமெரிக்கா தொடரில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் கனடா தோல்வியடைந்தது.
உருகுவே – கனடா ஆகிய அணிகளுக்கு இடையில் இந்த ஆட்டம் சனிக்கிழமை (13) நடைபெற்றது.
Penalty உதை மூலம் உருகுவே 4-3 என்ற goal கணக்கில் கனடாவை வீழ்த்தியது.
COPA அமெரிக்கா தொடரின் அரையிறுதி ஆட்டம் வரை கனடா முன்னேறியிருந்தது.
முன்னர் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் Argentina அணி கனடாவை 2-0 என்ற goal கணக்கில் வெற்றியடைந்தது.