September 16, 2024
தேசியம்
செய்திகள்

2032க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை பாதுகாப்புக்கு செலவிட கனடா உறுதி

2032 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட எதிர்பார்ப்பதாக கனடிய அரசாங்கம் தெரிவித்தது.

பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வியாழக்கிழமை (11) வெளியிட்டார்.

2032 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதத்தை பாதுகாப்பிற்காக செலவழிக்கும்  NATO உறுதிமொழியை அடைய எதிர்பார்ப்பதாக கனடா கூறுகிறது.

Washington நகரில் நடைபெறும் NATO உச்சி மாநாட்டின் இறுதி நாளில் இந்த அறிவித்தல் வெளியானது.

இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் Justin Trudeau பங்கேற்கிறார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இரண்டு சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவழிக்கும் NATO எதிர்பார்ப்பை எட்டாதது குறித்த கனடிய அரசாங்கம் விமர்சனங்களை எதிர் கொண்டது.

ஒரு வருடத்திற்கும் மேலாக, கனடா பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்க NATO கூட்டணி உறுப்பினர்களிடமிருந்து அதிகரித்து வரும் அழுத்தங்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளது.

பல மாதங்கள் இந்த விடயத்தில் அழுத்தத்தை எதிர்கொண்ட பின்னர் Justin Trudeau அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

Related posts

Markham விடுதியில் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை

Lankathas Pathmanathan

வெள்ளிக்கிழமை 41 ஆயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுகள் பதிவு

Lankathas Pathmanathan

சுட்டுக் கொல்லப்பட்ட OPP அதிகாரி பதுங்கியிருந்து தாக்கப்பட்டார்

Lankathas Pathmanathan

Leave a Comment