British Colombia நெடுந்தெரு விபத்தில் 3 பேர் மரணமடைந்தனர்.
ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் இதில் மரணமடைந்ததாக RCMP கூறுகிறது
செவ்வாய்க்கிழமை (09) காலை இந்த விபத்து Fraser Valley பகுதியில் நிகழ்ந்தது.
இரண்டு பெரியவர்கள், ஒரு குழந்தை இந்த விபத்தில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Tractor trailer, பயணிகள் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
பயணிகள் வாகனத்தில் இருந்த இரண்டு பெரியவர்கள் சம்பவ இடத்தில் பலியானதாக RCMP கூறியது.
விபத்தில் காயமடைந்த குழந்தை விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சில மணிநேரங்களுக்கு பின்னர் மரணமடைந்ததாக RCMP உறுதிப்படுத்தியது.
இதில் Tractor trailer ஓட்டுநருக்கு எந்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை
இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையை முன்னெடுக்கின்றனர்.