70வது ஆண்டு NATO அமர்வை கனடா நடத்தவுள்ளது.
வடக்கு Atlantic ஒப்பந்த அமைப்பின் (NATO) பாராளுமன்ற சட்டமன்றத்தின் 70வது ஆண்டு கூட்டத்தை கனடா நடத்தவுள்ளது.
கனடிய NATO பாராளுமன்ற சங்கம் வியாழக்கிழமை (04) இந்த அறிவித்தலை வெளியிட்டது.
இந்த அமர்வு Montrealலில் November 22 முதல் November 25 வரை நடைபெறுகிறது.
300 பிரதிநிதிகள் இந்த அமர்வில் கலந்து கொள்கின்றனர்.
2018இல் இறுதியாக NATO அமர்வை கனடா Halifaxசில் நடத்தியது.