கடந்த ஆண்டு Conservative கட்சி விளம்பரத்திற்காக 8.5 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது.
இது ஏனைய அரசியல் கட்சிகளை விட கணிசமான அதிக செலவாகும்.
Liberal கட்சி அதில் ஒரு பகுதியையே செலவழித்தனர்.
Liberal கட்சி 2023இல் 381,000 டொலர்களை, NDP 42,000 டொலர்களை செலவழித்தது.
2023 ஆம் ஆண்டிற்கான அரசியல் கட்சிகளின் வருடாந்த நிதி வருமானத்தில் இந்த விபரங்கள் வெளியாகியுள்ளது.
கனடிய தேர்தல் திணைக்களம் இந்த வாரம் இந்த விபரங்களை வெளியிட்டது.
கடந்த கோடை காலம் முதல், தேசிய கருத்துக் கணிப்புகளில் Conservative கட்சி Liberal கட்சியை விட முன்னணியில் உள்ளது.