Liberal நாடாளுமன்ற குழுவின் பெரும்பான்மையினர் பிரதமரை ஆதரிப்பதாக துணைப் பிரதமர் தெரிவித்தார்.
Liberal நாடாளுமன்ற குழுவின் பெரும்பான்மையினர் தங்கள் தலைவரை தொடர்ந்து ஆதரித்து வருவதாக துணைப் பிரதமர் Chrystia Freeland கூறினார்.
பிரதமர் Justin Trudeauவின் தலைமைத்துவம் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில் துணைப் பிரதமரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் Toronto – St. Paul தொகுதி இடைத் தேர்தலில் Liberal கட்சி தோல்வியை எதிர்கொண்ட நிலையில் இந்தக் கேள்விகள் தீவிரமடைகின்றன.
Toronto பெரும்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (03) மாலை துணைப் பிரதமர் இல்லத்தில் சந்தித்து இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து விவாதித்தனர்.
Conservative கட்சிக்கு ஆச்சரியமான வெற்றியை வழங்கியதன் மூலம் Toronto – St. Paul வாக்காளர்கள் Liberal கட்சிக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பியுள்ளனர் என Chrystia Freeland தெரிவித்தார்.