நாட்டை ஆட்சி செய்வதில் தனது கவனம் உள்ளது என பிரதமர் Justin Trudeau கூறினார்.
கடந்த வாரம் Toronto – St. Paul தொகுதி இடைத் தேர்தலில் Liberal கட்சி பெரும் தோல்வியை எதிர்கொண்டது.
இந்தத் தோல்வியின் பின்னர் Justin Trudeauவின் பதவி குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தத் தோல்வி குறித்து விவாதிக்க Liberal கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை நடத்துவது குறித்து கருத்து தெரிவிக்க பிரதமர் மறுத்துள்ளார்.
இது போன்ற ஒரு கூட்டத்திற்கான வலியுறுத்தல் கட்சியின் பல மட்டங்களிலும் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது.
Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் இத்தகைய கூட்டத்தை கோரியுள்ளனர்.
வேறு சிலர் அமைச்சரவை மாற்றமொன்றை வலியுறுத்துகின்றனர்.
இந்த நிலையில் Toronto – St. Paul தொகுதி இடைத்தேர்தல் குறித்து Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தொலைபேசியில் உரையாடி வருவதாக Justin Trudeau தெரிவித்தார்.
பிரதமர் செவ்வாய்க்கிழமை (02) தனது செயற்குழு நிர்வாகிகளை சந்தித்தார்.
கட்சியை மேம்படுத்துவது குறித்து பல்வேறு தரப்பினருடனும் ஆலோசித்து வருவதாக Justin Trudeau தெரிவித்தார்.
கருத்துக் கணிப்புகளில் பிரதமருக்கு ஆதரவு குறைந்து வரும் நிலையில் பதவி விலகுமாறு வெளியாகும் கோரிக்கைகளை அவர் தொடர்ந்து நிராகரிக்கின்றார்.