தேசியம்
செய்திகள்

P.C. மாகாண சபை குழுவில் இருந்து விலக்கப்பட்டது குறித்து MPP ஏமாற்றம்!

Progressive Conservative கட்சியின் மாகாண சபை குழுவில் இருந்து விலக்கப்பட்டது குறித்து Ontario மாகாண சபை உறுப்பினர் ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.

Progressive Conservative கட்சியின் மாகாண சபை குழுவில் இருந்து Ontario மாகாண சபை உறுப்பினர் Goldie Ghamari, கடந்த வாரம் விலக்கப்பட்டார்.

இந்த நடவடிக்கையால் ஏமாற்றமடைந்ததாகவும் தொடர்ந்து சுயேச்சையாக செயல்பட உள்ளதாகவும் Goldie Ghamari ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

முதல்வர் Doug Ford ன் இந்த முடிவை ஒரு தலைப்பட்சமானது என Goldie Ghamari விமர்சித்தார்.

2018 முதல் Carleton தொகுதியை Progressive Conservative கட்சியின் மாகாண சபை உறுப்பினராக Goldie Ghamari பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.

இங்கிலாந்தின் தீவிர வலதுசாரி ஆர்வலர் Tommy Robinson உடனான சந்திப்பு புகைப்படத்தை Goldie Ghamari அண்மையில் வெளியிட்டிருந்தார்.

இதன் பின்னணியில் Progressive Conservative கட்சியின் மாகாண சபை குழுவில் இருந்து Goldie Ghamari விலக்கப்பட வேண்டும் என கனடிய முஸ்லிம்கள் தேசிய சபை வலியுறுத்தியது.

ஆனாலும் இந்த சந்திப்பின் முன்னர், Tommy Robinson பின்னணி குறித்து தான் அறிந்திருக்கவில்லை என Goldie Ghamari கூறியிருந்தார்.

கனடாவில் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஈரானிய-கனடிய பெண் Goldie Ghamari என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் கனேடியர்கள் Monkeypox முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!

Lankathas Pathmanathan

மேற்கு கனடாவில் Delta மாறுபாட்டின் வழித்தோன்றல்களை கண்காணிக்கும் சுகாதார அதிகாரிகள்!

Gaya Raja

கனடாவின் வேலையற்றோர் விகிதம் குறைந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment