தேசியம்
செய்திகள்

கனமழை காரணமாக Trans-Canada நெடுஞ்சாலை மூடப்பட்டது!

கனமழை காரணமாக Trans-Canada நெடுஞ்சாலை மூடப்பட்டது.

British Columbia மாகாணத்தின் Kamloops நகரின் அருகே ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நெடுஞ்சாலை மூடப்பட்டது.

இதில் குறைந்தது 20 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு Thompson-Nicola பிராந்தியம் திங்கட்கிழமை (01) அதன் அவசர கால செயல்பாட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

இந்த வெள்ளம் காரணமாக Trans-Canada நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை British Columbia மாகாண போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (31) மூடியது.

நெடுஞ்சாலை வாகன போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்பட்ட போதிலும் வீதி சீரமைப்புக்கு பல நாட்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ரஷ்யர்களுக்கு எதிராக புதிய தடைகளை அறிவித்த கனடா!

Lankathas Pathmanathan

அவசரகாலச் சட்டத்தை செயல்படுத்துவதை ஆதரித்தேன்: CSIS தலைவர்

Lankathas Pathmanathan

Brampton நகர முதல்வர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் Patrick Brown

Leave a Comment