December 12, 2024
தேசியம்
செய்திகள்

பிரதமருக்கான ஆதரவை தொடர்ந்து வெளிப்படுத்தும் அமைச்சர்கள்!

Toronto – St. Paul தொகுதியின் இடைத் தேர்தல் முடிவு வெளிப்படுத்தும் செய்தி தெளிவானது என அமைச்சர் Marc Miller தெரிவித்தார்.

இந்த வாரம் நடைபெற்ற Toronto – St. Paul தொகுதி இடைத் தேர்தலில் Conservative கட்சியின் வேட்பாளர் Don Stewart வெற்றி பெற்றார்.

இந்த இடைத் தேர்தலில் தோல்வியடைந்தாலும் பிரதமருக்கான ஆதரவை அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்துகின்றனர்.

Liberal கட்சி “உள்ளக பரிசோதனையின் காலகட்டத்தை” எதிர்கொள்கிறது என்பதை Marc Miller ஏற்றுக் கொண்டார்.

Pierre Poilievreரை வெற்றி கொள்ள சிறந்த நிலையில் Justin Trudeau உள்ளார் என குடிவரவு அமைச்சர் Marc Miller கூறினார்.

புதன்கிழமை (26) நாடளாவிய ரீதியில் அமைச்சர்கள் பலர் பல்வேறு அறிவித்தல்களை வெளியிட்டனர்.

இந்த நிகழ்வுகளில் Justin Trudeauவின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகளை அவர்கள் எதிர்கொண்டனர்.

அமைச்சர்கள் மத்தியில் உள்ள கருத்து வேறுபாடு குறித்த கேள்விகளை சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைச்சர் Steven Guilbeault நிராகரித்தார்.

இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த கூடிய ஒரு தலைமுறையின் மிக முக்கியமான தலைவர் Justin Trudeau என மனநல அமைச்சர் Ya’ara Saks தெரிவித்தார்

அடுத்த தேர்தலில் Liberal கட்சியை வழிநடத்த பிரதமர் உறுதி பூண்டுள்ளார் என நிதி அமைச்சர் Chrystia Freeland கூறினார்.

Related posts

வதிவிட பாடசாலைகளில் இருந்து தப்பியவர்கள் வலியை உணர்ந்தேன்: திருத்தந்தை

17 மாதங்களின் பின்னர் கனடாவுக்குள் அனுமதிக்கப்படும் அமெரிக்கர்கள்!

Gaya Raja

72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட WestJet விமானிகள்

Lankathas Pathmanathan

Leave a Comment