Ottawa நகரின் முன்னாள் துணை காவல்துறை தலைவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
Ottawa காவல்துறையின் முன்னாள் துணைத் தலைவர் Uday Jaswal மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது தலைமையில் பணியாற்றிய ஒரு பெண் காவல்துறை அதிகாரி தொடர்பாக இந்த குற்றச்சாட்டு பதிவானது.
பணியிடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
பல மாதங்கள் நீடித்த விசாரணையைத் தொடர்ந்து Ontario சிறப்புப் புலனாய்வு பிரிவு செவ்வாய்க்கிழமை (25) இந்தக் குற்றச்சாட்டை பதிவு செய்தது.
இந்த குற்றச்சாட்டு 2011 இல் நடந்த ஒரு சம்பவத்துடன் தொடர்புடையது என கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகளை Uday Jaswalலில் சட்டத்தரணி முற்றாக மறுத்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை என கூறும் சட்டத்தரணி Ari Goldkind, இந்த தவறான குற்றச்சாட்டு பொய் என நீதிமன்றத்தில் வாதாட தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
1995 ஆம் ஆண்டு Ottawa காவல்துறையில் இணைந்த அவர் துணை காவல்துறை தலைவர் பதவி வரை உயர்ந்தார்.
Durham பிராந்திய காவல்துறையிலும் அவர் அதே பதவியை வகித்தார்
இரண்டு பதவிகளுக்கும் அவர் முறைகேடு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்
பல பெண்களின் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளின் பின்னர் February 2022 இல் Uday Jaswal, Ottawa காவல்துறை சேவையில் இருந்து பதவி விலகினார்
Ontario காவல் துறை சேவைகள் சட்டத்தின் கீழ் அவர் எட்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
இவற்றில் ஆறு குற்றச்சாட்டுகள், Ottawa காவல்துறையில் பணியாற்றிய மூன்று பெண்கள் அளித்த புகார்கள் தொடர்பானவையாகும்.
ஏனையவை Durham பிராந்தியத்தில் அவர் கடமையாற்றிய காலத்தில் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பானவை.