தேசியம்
செய்திகள்

லெபனானில் தங்கியுள்ள கனடியர்களை உடனடியாக வெளியேற வலியுறுத்தல்

லெபனானில் தங்கியுள்ள கனடியர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கனடிய அரசாங்கம் கோரியுள்ளது.

வன்முறை அதிகரித்து வரும் நிலையில் லெபனானில் உள்ள கனடியர்களை உடனடியாக வெளியேறுமாறு வெளிவிவகார அமைச்சர் Melanie Joly வலியுறுத்தினார்.

அதிகரித்து வரும் வன்முறை காரணமாக பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமடைய கூடும் என Melanie Joly செவ்வாய்க்கிழமை (25) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்

லெபனானுக்கு பயணிப்பதற்கான நேரம் இதுவல்ல என Melanie Joly அந்தக் கடிதத்தில் கூறினார்

ஆயுத மோதல்கள் தீவிரமடைந்தால், அது கனடியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் திறனையும், தூதரக சேவைகளை வழங்கும் கனடாவின் திறனையும் பாதிக்கும் என அவர் எச்சரித்தார்.

Related posts

இலையுதிர் காலத்தில் மற்றொரு booster தடுப்பூசியை பெற பரிந்துரை

Lankathas Pathmanathan

Pharmacare ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு பிரதமர் அழைப்பு

Lankathas Pathmanathan

Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெறும் சந்தர்ப்பத்தை மீண்டும் பெறும் Toronto Maple Leafs

Leave a Comment