December 12, 2024
தேசியம்
செய்திகள்

கடந்த ஆண்டை விட வெறுப்பு குற்றச் சம்பவங்கள் 55 சதவீதம் அதிகரிப்பு

கடந்த ஆண்டை விட வெறுப்பு குற்றச் சம்பவங்கள் 55 சதவீதம் அதிகரித்துள்ளது என Toronto காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் நடந்த சம்பவங்களின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்துள்ளது என Toronto காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Toronto காவல்துறை அதிகாரிகள் நாளாந்தம் ஐந்து வெறுப்பு குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு இதுவரை நடந்ததாக கூறப்படும் 221 வெறுப்பு குற்றங்களில் 45 சதவிகிதம் Antisemitism ஆகும்.

இது ஏனைய அனைத்து வெறுப்பு குற்றங்களை விட அதிகமானது என காவல்துறை துணைத் தலைவர் Robert Johnson கூறினார்.

காவல்துறையினர் மீதான அவநம்பிக்கை காரணமாக பெரும்பாலான வெறுப்புக் குற்றங்கள் குறைவாக பதிவாகின்றன என சமூக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Israel-Hamas யுத்தம் October 7 ஆம் திகதி ஆரம்பித்ததில் இருந்து, 1,378 வெறுப்புக் குற்றங்களை விசாரித்தாக Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவற்றில்  333 சம்பவங்கள் வெறுப்புணர்வை தூண்டியவை என தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் காலத்தில் அதிகாரிகள் வெறுப்புக் குற்றங்கள் தொடர்பாக 107 பேரை கைது செய்து, 268 குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

Related posts

சர்ச்சைக்குரிய Greenbelt திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

 COVID காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவு

Lankathas Pathmanathan

February மாதத்தின் பின் கனடா வந்த 5,000க்கும் மேற்பட்ட சர்வதேச விமான பயணிகளுக்கு தொற்று!

Gaya Raja

Leave a Comment